மட்டு – கல்லடிப் பாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

302
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சத்துருக்கொண்டான் ஆயுர்வேத வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணி புரியும் மகாலிங்கம் புவி (வயது 35) என்பவர் குருக்கள்மடத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியபோது அவர்களை காப்பாற்ற முற்படுகையில் பின்னால் வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிள் சிற்றூழியரை மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE