மணமகன் தேவை விளம்பரம் ஊடாக பெண்களை ஏமாற்றி வந்த திருடன்

307

பத்திரிகைகளில் வெளிவரும் மணமகன் தேவை என்ற பகுதியூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை களுத்துறை தெற்குப் பொலிஸார் நேற்று முன்தினம் தினம் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் 2 கிராம்,80 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே பொலிஸார் கைது செய்திருந்ததாக.தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொலிஸார் குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்த நபர் குறித்த ஏனைய குற்றச்செயல்கள் பற்றி தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் களுத்துறை, பொரலஸ்கமுவ, காலி, வாதுவ, மாத்தறை, மொரட்டுவை, பாணந்துறை, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி  உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள பெண்களை ஏமாற்றி பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

linkers_UniversalMatrimonial

SHARE