மணல் மற்றும் மண் ஏல விற்பனை

83

 

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் மற்றும் மண் என்பன ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏல விற்பனை நாளையதினம்(06.02.2024)பகல் 9 மணிக்கு ஏலத்தில் விடப்படவுள்ளது.

ஏல விற்பனை
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட 99 கியூப் மணல் மற்றும் 12கியூப் மண் என்பனவற்றின் ஏல விற்பனை நடைபெறவுள்ளது.

குறித்த மண் மற்றும் மணலின் ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட முடியும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

SHARE