மணிரத்னம் படம் எந்த வகையில் நம்மை கவரும் என்றே சொல்ல முடியாது. தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் கூட இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்த படமே இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் மணிரத்னத்தின் அடுத்த பட செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.
இவருடைய அடுத்த படத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான ராம் சரண் நடிக்க இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கிறது.
ராம் சரணை வைத்து இயக்கினால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும்.