ஓகே கண்மணியின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் மணிரத்னம். முதலில் தனுஷை வைத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்தது.
ஆனால் மணிரத்னத்தின் அலுவலகத்திலிருந்து தற்போது வந்த தகவல்படி நடிகர் கார்த்தியை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடிப்பதாக இருந்தது, கடைசி நேரத்தில் கார்த்தி துணை இயக்குனராக சேர்ந்து விட்டார்.
கார்த்தி தற்போது கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா என்ற படத்திலும், நாகார்ஜுனாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களும் முடித்தவுடன் மணிரத்னம் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.