மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பம்

224

விஜய் சேதுபதியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவரின் படங்கள் அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே நல்ல விலைக்கு போனது.

ஹீரோவாக மட்டுமல்ல விக்ரம் வேதா படத்தில் வில்லனாகவும் கலக்கிவிட்டார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா பலர் நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தின் ஷூட்டிங் சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு இன்று சென்னை கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளதாம்.

விஜய் சேதுபதி தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்காக இன்று ஷூட்டிங்கில் இணைந்துள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிக்கிறார்கள்.

SHARE