மண்ணெண்ணெய் விலை குறைப்பு

162

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெதஆரச்சி இதனை தெரிவித்துள்ளார். 25 முதல் 30 ரூபா வரையில் விலை குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவுக்கும் 80 ரூபாவுக்கும் இடையிலான விற்பனை விலைக்கு குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், 44 ரூபாவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE