மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அரநாயக்க சென்றடைந்த ஜனாதிபதி, அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், கமாண்டோ படைப்பிரிவினரும் அரநாயக்கவில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பின்னர் பிற்பகல் இரண்டரை மணியளவில் ஹெலிகொப்டர் மூலமாக ஜனாதிபதி மீண்டும் கொழும்பை வந்தடைந்துள்ளார்.