மதியம் சாப்பாட்டில் உங்கள் உணவில் இது எல்லாம் இருக்கிறதா?

191

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம்.

நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

  • வெரைட்டி ரைஸ் என்று நாம் செய்யும் புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதம் ஆகியவை வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவற்றில் சிறிது பூண்டு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவை சேர்த்தால் மிகவும் நல்லது.
  • பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள்.
  • மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
  • சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது.
  • மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும்.
  • ரசத்தை போல தான் தயிரும். தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெருகும்.
  • அனைத்து கீரை வகைகளும் இருத்தல் நல்லது.
SHARE