மதுபான போத்தல்களில் விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன:

290

மதுபான போத்தல்களில் விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளில் விசேட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கலால் திணைக்களத்தின் கண்காணிப்பிற்கு அமைய இந்த இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

அதேபோன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு போத்தல் மதுபானத்திற்கும் விசேட ஸ்டிக்கர் ஒட்டப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மதுபானங்களுக்கு பாரியளவில் வரி விதித்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபானங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானங்களினால் அரசாங்கத்திற்கு சேர வேண்டிய வருமானம் பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE