மதுபோதையற்ற வீடு, மதுவற்ற நாடு செயலமர்வு

316

நாட்டின் அபிமானத்தைக் காப்பதற்கு மனுபோதையற்ற நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைவதாக அட்டன் கல்வி வலய பாடசாலை மாணவர்கள் பிரமாணம் செய்துகொண்டனர்.

நாட்டின் எதிர்காலத்தை நாங்களே பொறுப்பேற்கின்றோம். எனவே இந்த நாட்டை மதுபோதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாடாக மாற்றுவதற்கான சவாலை பொறுப்பேற்கின்றோம் என்று பாடசாலை மாணவர்கள் தீர்மானம் செய்துகொண்டனர்.

மதுபோதையற்ற வீடு, மதுவற்ற நாடு என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொனிப்பொருளில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத மத்திய மகா வித்தியாலயம், கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயம், களுகல மகா வித்தியாலயம் மற்றும் கடவல தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகளிலும் 10.05.2016 அன்று நடைபெற்றது.

அந்தவகையில் அட்டன் ஸ்ரீபாத மத்திய மகா வித்தியாலயத்தில், அட்டன் சுங்க திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த செயலமர்விற்காக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் மஹேஷி மதுவந்தி மற்றும் எவ்.ஆர்.எல். சாலி ஆகியவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதோடு, அட்டன் சுங்கத் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.எம்.பி திலகரட்ணவும் கலந்துகொண்டிருந்தார்.

(க.கிஷாந்தன்)

918aadf4-041a-4980-b4e6-ffaf6d2f8ba8

7ab2e545-2164-4959-8b5c-3f6b0c21cc49

SHARE