மதுபோதையில் காரை ஓட்டி இந்தியர்கள் ஐவரை கொன்ற நபர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

104

 

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இந்தியர்கள் ஐந்து பேரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் ஒரு ஹோட்டலில் வெளிப்புறம் உள்ள பகுதியில் பலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் இந்தியர்களான 38 வயதான விவேக் பாட்டியா, 11 வயதான விஹான், 44 வயதான பிரதிபா ஷர்மா, 30 வயதான ஜதின் குமார் மற்றும் 9 வயதான அன்வி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அந்த கார் சாரதியை பொலிஸார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் 66 வயதான ஸ்வாலே (66) என்பவர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

எனவே பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

SHARE