மது குடித்துக்கொண்டு கார் ஓட்டிய இளம்பெண்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

204

உக்ரைன் நாட்டில் மது அருந்துக்கொண்டு இரண்டு தோழிகள் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

உக்ரைன் நாட்டில் உள்ள Izyum நகரில் Sofia Magerko(16) என்பவர் மொடலாக பணியாற்றி வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், உள்ளூரில் நிகழ்ந்த அழகுப்போட்டியில் இவர் முதல் பரிசையும் பெற்றவர் ஆவர்.

இந்நிலையில், இவரும் இவரது தோழியான Dasha Medvedeva(24) என்பவரும் சில தினங்களுக்கு முன்னர் சொகுசு கார் ஒன்றியல் பயணமாகியுள்ளனர்.

காரை மூத்தப்பெண் ஓட்டியபோது சோஃபியா இருவரையும் லைவ்வாக வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், இருவரும் கைகளில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கமெராவில் உற்சாகமாக பேசியவாறு சென்றுள்ளனர்.

‘இன்று நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்’ என சோஃபியா உற்சாக குரலில் பேசியுள்ளார்.

வீடியோ ஒளிப்பரப்பு நடந்துக்கொண்டு இருக்கும்போது திடீரென இருவரும் அலரும் சத்தமும் கார் ஒரு கம்பத்தின் மீது பயங்கரமாக மோதும் சத்தமும் கேட்டுள்ளது.

இதன் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்றபோது வீடியோ எடுத்த சோஃபியா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சோஃபியாவின் தோழியை மருத்துவமனை கொண்டு சென்றபோது அவரும் வழியிலேயே பலியாகியுள்ளார்.

மது அருந்துக்கொண்டு, வீடியோவில் பேசியதால் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE