ஈரானில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை அருந்திய 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
குறித்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உட்பட 3 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்