மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான  நியமனம் வழங்கி வைப்பு

215
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கான புதிய  உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்று (12) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டதோடு,  மன்னார் நகர புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
  
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர மத்தியஸ்தர்  சபைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இதன் தலைவராக   எம்.சிவானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து மத்தியஸ்தர்  சபையின் உப தலைவராக திருமதி.நிஸாந்தினி ஸ்ரான்லி ஜோஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்களை    மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாஸ் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE