மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

450
மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டதில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண்ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை, அணுசக்தி விண்வெளி மற்றும் இலாகா ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்கை ரீதியான முடிவுகளை பிரதமர் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  ராஜ்நாத் சிங்- உள்துறை
  •  அருண்ஜெட்லி- நிதி, ராணுவம் மற்றும் கம்பெனிகள் விவகாரம்
  •  சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன்துறை
  •  மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  •  நிதின் கட்காரி – தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து
  •  சதானந்த கவுடா – ரயில்வே
  •  ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் சிவில் சப்ளை
  •  ரவிசங்கர் பிரசாத் – சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
  •  ஸ்மிரிதி இரானி – மனித வள மேம்பாடு
  •  உமா பாரதி – நீர்வளத்துறை மற்றும் நதிகள் மேம்பாடு,  கங்கை நிதி புனரமைப்புத்துறை
  •  அனந்த குமார் – ரசாயனம் மற்றும் உரத்துறை
  •  நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மையினர் நலத்துறை
  •  ராதா மோகன் சிங் – வேளாண்துறை
  •  கோபிநாத் முண்டே – கிராப்புற மேம்பாடு,  பஞ்சாயத்து ராஜ், துப்புரவு, குடிநீர்த்துறை
  •  வெங்கையா நாயுடு- நாடாளுமன்ற விவகாரம், நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு, வீட்டு வசதித்துறை
  •  ஆனந்த் கீத்தே- கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை
  •  அசோக் கஜபதி ராஜூ- விமானத்துறை
  •  ஜூயல் ஓராம்- பழங்குடியினர் நலத்துறை
  •  ஹர்ஷ்வர்தன்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
  •  நரேந்தர் சிங் தோமர்- சுரங்கம், எஃகு, தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை
  •  கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
  •  ஹர்சிம்ரத் கவூர் பாதல்- உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைத்துறை

தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களுக்கான இலாகா விவரம்:

  •  நிர்மலா சீதாராமன் – வணிகம் மற்றும் தொழிற்துறை
  •  வி.கே.சிங்- வடகிழக்கு மண்டல மேம்பாடு மற்றும் வெளியுறவு, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை இணையமைச்சராகவும் இருப்பார்.
  •  சந்தோஷ் குமார் கங்வார்- ஜவுளித்துறை
  •  தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
  •  ஸ்ரீபத் நாயக்- கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை
  •  பிரகாஷ் ஜவதேகர் – தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் சுற்றுச்சுழல், வனம், பருவநிலை மாறுபாடு. இவர் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை  அமைச்சராகவும்  பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  பியூஷ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, மாற்று மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை
  •  இந்திரஜித் சிங் ராவ்- புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை, திட்டங்கள் துறை மற்றும் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  •  சர்பானந்த சோனோவால்- தொழில்முனைவோர், இளைஞர் நலன், விளையாட்டு, திறன் மேம்பாடு
  •  ஜிதேந்திர சிங்- அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல்துறை

இணை அமைச்சர்கள்

  •  பொன் ராதாகிருஷ்ணன்- கனரக ஆலை, பொதுத்துறை நிறுவனங்கள்
  •  சித்தேஸ்வரா- விமானத்துறை
  •  நிகல் சந்த்- ரசாயனம், உரத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை
  •  மனோஜ் சின்கா- ரயில்வேத்துறை
  •  உபேந்திர குஷ்வாகா- பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை
  •  கிரண் ரிஜ்ஜு- உள்துறை
  •  கிரிஷ்ன பால் குஜ்ஜார்- சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை
  •  சஞ்சீவ் குமார் பாலியான்- வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை
  •  மன்சுக்பாய் தாஞ்சிபாய் வசாவா- பழங்குடியினர் நலத்துறை
  •  ராவ் சாஹேப் தாதாராவ் பாட்டில் தன்வீ- உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்துறை
  •  விஷ்ணு தியோ சாய் – சுரங்க, ஸ்டீல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
  •  சுதர்சன் பகத் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
SHARE