மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

216

ob_daa2f3_untitled4

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை 300 டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாய உற்பத்தி பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், கைத்தொழில் மற்றும் வீட்டு நிர்மாணங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.

எனவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டி கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE