மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினால் 12-7-2016 கொட்டக்கலை பிரதேச சபை காரியாலயத்தில் வழங்கப்பட்டன. இதன்போது நுவரெலியா பிரதேச சபை செயலாளர் விஜேந்திரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவிக்கையில், மத்திய மாகாண சபையினூடாக கடந்த 3 வருடகாலமாக மிகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கூரைத்தகடுகள் மட்டுமல்லாமல் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தல் அதனோடு எம்மால் முடிந்த சிறிய சிறிய உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலங்களில் பெருந்தோட்டப்பகுதிகளில் உட்கட்டமைப்பு, குடிநீர் போன்ற வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்