‘மத்திய மாகாணத்தில் 12 பெருந்தோட்ட பாடசாலைகள் உடனடியாக அபிவிருத்தி’

262

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய மலையகத்தில் 23 கணித விஞ்ஞான

பாடசாலைகளும் ஒரு விளையாட்டு பாடசாலையும் ஒரு நுண்கலை பாடசாலையும் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக்

அபிவிருத்தி செய்யப்படும் செயல்திட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின்

நேரடி கண்காணிப்பில் மத்திய மாகாணத்தில் கண்டிரூபவ் நுவரெலியாரூபவ் மாத்தளை மாவட்டங்களில் 12 பாடசாலைகள்

அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இவற்றில் கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹேதுனாவ மத்திய கல்லூரி

விளையாட்டு பாடசாலையாகவும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம் நுண்கலை

பாடசாலையாகவும் ஏனைய 10 பாடசாலைகள் கணித விஞ்ஞான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

மொத்தப் பாடசாலை 25 இல் மத்திய மாகாணத்திற்கான 12 பாடசாலையும் ஏனைய 13 பாடசாலைகள் ஊவா மற்றும்

சப்பிரகமுவ மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. மேற்படி தெரிவு செய்யப்பட்ட 12

பாடசாலைகளின் அதிபர்களுக்கும் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.சதிஸ்ரூபவ் மேலதிக கல்வி

பணிப்பாளர் ஜே.அமுதவள்ளிரூபவ் பொருளியலாளர் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட

அமைச்சின் கல்வி அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று கண்டியில் நடைபெற்றது. இதன்போது

மேற்படி பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாகவும் அந் நிதிகளை பிரயோகிக்கப்படும்

விடயங்கள் தொடர்பாகவும் தேவையான வளங்கள் தொடர்பாகவும் செயல்படுத்த இருக்கும் வேலைத்திட்டம்

தொடர்பாகவும் ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து இந்த வேலைத்திட்டங்கள்

உடனடியாக மாகாண சபை ஊடாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி இராஜாங்க அமைச்சர்

வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் அதீத முயற்சியால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்து வருகின்றமை

குறிப்பிடத்தக்கது.

41c623e7-6622-4bb6-806e-a45e8274e086 c05f691d-2045-4607-a3e8-a3bd14229992 d233c992-04a6-4aeb-b212-8602a1c0aaea e80f6cb9-fb9a-4e70-920c-097ac8101036

SHARE