மத்திய வங்கி அதிகாரிகளிடம் கோப் குழு விசாரணை

229

மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

மத்திய வங்கி அதிகாரிகளை கோப் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு, அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக கோப் குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

SHARE