மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ராபிகிற்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை வழக்கியுள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.டி. கொடிகாரவினால் கடந்த 1ம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதவாத அடிப்படையில் வங்கிகள் செயற்பட்டு வருவதாகவும் இதனால் மதப் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுபல சேனா அமைப்பு கடந்த மாதம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து விசாரணை நடாத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் இலங்கையில் மதவாத அடிப்படையில் வங்கிகள் செயற்படுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.