மந்திரவாதி கொடுத்த எலுமிச்சைப்பழத்தை விழுங்கியதால் பெண் பலி

254
limes

பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மந்திரவாதியால் தனது மனைவியின் வாயில் எலுமிச்சம்பழம் வைத்து திணிக்கப்பட்டதாகவும்,தேங்காயினால் அவரது தலையில் அடித்ததோடு, தீப்பந்தத்தால் மனைவியின் உடலில் சூடு வைத்ததாகவும் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினை அடுத்து குறித்த மந்திரவாதியும், அவரது உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE