மனநிலை பாதிக்கப்பட்ட விமானியை எவ்வாறு அனுமதிக்கலாம்? விஸ்வரூபம் எடுக்கும் ஜேர்மன் விங்ஸ் விமான விபத்து

266

கடந்த ஆண்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தில் துணை விமானியின் உடல்நிலை விடயத்தில் லூப்தான்சா நிறுவனம் அலட்சியமாக நடந்துகொண்டது குறித்து அந்நாட்டு மருத்துவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

2015 ஆம் ஆண்டு லூப்தான்சா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜேர்மன் விங்ஸ் A320 என்ற விமானம், 149 பயணிகளுடன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது.

இது, விபத்து இல்லை என்றும் துணை விமானியின் திட்டமிட்ட செயல் தான் எனவும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தன, மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த துணை விமானி, வேண்டுமென்றே விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோதியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.

தற்போது, இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில், ஜேர்மன் மருத்துவ குழு, துணை விமானியின் மருத்துவ அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

துணை விமானி Andreas Lubitz பணிக்குசேர்கையில் நல்ல உடல் தகுதியோடு தான் இருந்துள்ளார், அதன் பின்னர் உடல்நல ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையால் பணியில் இருந்து இடையில் நீக்கப்பட்ட அவரை மீண்டும் எவ்வாறு நிறுவனம் பணியில்சேர்த்தது.

மிகவும் மோசமான மன அழுத்தம் மற்றும்உடல்நிலை ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அவர், மீண்டும் ஒரு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றதன் காரணமாக பணியில் சேர்த்துக் கொள்ளலாமா?

அவரது மனநிலை மற்றும் உடல்நிலை ரீதியான தகுதி தேவையில்லையா? தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அது விமானம் ஓட்டிய பழக்கத்தில் மீண்டும் அவர் ஓட்டியிருக்கலாம்.

ஆனால், மனநிலை சரியில்லாத துணை விமானியை எவ்வாறு விமானத்தை ஓட்டுவற்கு அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கண்டிப்பான முறையில் லூப்தான்சா நிறுவனத்தின் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர், ஏற்கனவே இதுதொடர்பான விசாரணைகள் கடந்த 1 வருடமாக நடைபெற்று வருகின்ற நிலையில் மருத்துவ குழு இந்த பிரச்சினைக்கு சற்று அழுத்தம் கொடுத்துள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE