மனநோயாளிக்கு மரண தண்டனை விதித்த கொடூரம்

237

பாகிஸ்தானில் மனநோயாளி ஒருவருக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு மதபோதகரை கொலை செய்த குற்றத்திற்காக இம்டாட் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 2008ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 50 வயதாகும் இம்டாட் அலி, 2012ம் ஆண்டு முதல் Schizophrenia எனப்படும் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து இவரை தூக்கிலிடக்கூடாது என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த பாகிஸ்தான் அரசு, குறித்த நோயானது பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் குற்றவியல் சார்ந்த மனநோய் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவித்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கும் அரசுக்கு சாதகமாக அமைந்ததால், 2.11.2016ம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்ற திகதி குறிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் நீதி இயக்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தண்டனை நிறைவேற்ற தடை விதித்ததுடன், மறு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

625-0-560-350-160-300-053-800-668-160-90

SHARE