மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா

707
மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கால அவகாசம் வழங்க இணங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் ஏற்பட்டது.

இதன்போது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கலந்துரையாடலை Ibn Sina அமைப்பு, Collectif la Paix au Sri Lanka, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சர்வதேச குற்றவியல் தடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு என்பன ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை அரச தரப்பின் மீது தமிழர்கள் மீதான போர்க்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த அரசாங்கத்தினால் எவ்வாறு நீதியை ஏற்படுத்த முடியும் என்று கலந்துரையாடலில் பங்கேற்றோர் கேள்வி எழுப்பினர்.

அதேநேரம், இலங்கையின் அரசாங்கத்தரப்பில், தமிழர்கள் தொடர்பான அடிப்படை அரசியலில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதில் கலந்துரையாடலில் ஈடுபட்டவர்கள் இணங்கினர்.

பேராசிரியர் மணிவண்ணன் தமது கருத்தில், இலங்கையின் தேர்தல் அமைப்பு மாற்றத்தினால், அரசியல் மாற்றத்தை கொண்டு வராது என்று குறிப்பிட்டார்.

SHARE