மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது!– பிரதமர்

288

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆசிய பிராந்திய வலய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறிய போது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறுதல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

நல்லிணக்கம் இன்றி பொறுப்பு கூறுதல் இல்லை, பொறுப்பு கூறுதல் இன்றி நல்லிணக்கமில்லை.

மனித உரிமைகளை பாதுகாக்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆசியாவின் வலுவான நாடாளுமன்றமாக இலங்கை மாற்றமடையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Ranil

SHARE