மனித உரிமை ஆணையாளர் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சி

287
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார் என திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

இராணுவத்தினரின் இரகசியங்கள் மற்றும் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவு, விசேட படையணிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள ஹூசெயன் முயற்சித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் ஒன்றின் ஊடாக ஹூசெய்ன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

வன்னிப் போர் தொடர்பிலான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள ஹூசெய்ன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

எனினும், புலனாய்வுப் பிரிவின் சில இரகசிய ஆவணங்களை ஹூசெய்ன் பெற்றுக்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும், சயிட் அல் ஹூசெய்ன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பிலான படையினரின் இரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சித்தார் என திவயின பத்திரிகை சில சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeid-Al-Hussein1-300x200

 

SHARE