மனைவியுடன் தேனிலவு சுற்றுலா சென்ற ரோஹித் சர்மா: வெளியான புகைப்படங்கள்

337

 

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது தேனிலவு சுற்றுலா பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.ரோஹித் சர்மா தனது காதலியான ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் இந்த மாதம் 13ம் திகதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் தேனிலவு சுற்றுலா சென்றுள்ளார்.

பிரான்சுக்கு சுற்றுலா சென்றுள்ள இந்த ஜோடி அங்கு ‘போரா- போரா’ தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

SHARE