மனைவியை கார் முன்னால் கட்டி வைத்து வேகமாக கார் ஓட்டிய கணவன்.

208

ஈரானில் மனைவியை மிரட்டும் வகையில் அவரை கார் முகப்பில் கட்டிவைத்து காரை வேகமாக ஓட்டி சென்ற கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

ஈரான் சாலையில் எடுக்கப்பட்ட வீடீயோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காரின் முகப்பில் மனைவி தொங்கியபடி வர கணவன் வேகமாக காரை ஓட்டுகிறார்.

பயத்தில் குறித்த பெண் கதறுவது போல வீடியோவில் உள்ளது.காரில் தொங்கிய பெண் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்ட நிலையில் மனைவியை மிரட்டவே கணவன் இச்செயலை செய்துள்ளார்.சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதையடுத்து கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வீடியோவை பார்த்த பலரும் இதுபோல மனிதத்தன்மையற்ற வகையில் நடப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்

SHARE