மனைவியை தாக்கி கொலை செய்த கணவன்

105

 

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு
கொலை சம்பவம் தொடரல்பில் 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு நீண்டத் தூரம் சென்ற நிலையில் கணவர் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE