மன்னாரில் உலக நதிகள் பாதுகாப்பு தினம் 

91
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் குமாரதேவன் அவர்களின் தலைமையில் உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (25)காலை பத்து மணியளவில் மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில் நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றும் போது, ஆறுகள் நதிகள் என்பன இயற்கை நமக்களித்த  கொடைகள் அவற்றைப் பேனிபாதுகாப்பதன் மூலமே நாமும் பலன் பெற்று நமது அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க முடியும் இன்றைய நமது சுயநல தேவைக்காக  கட்டுப்பாடுகள் இன்றி மணல் அகழ்வு செய்து மரங்களை வெட்டி ஆறுகளை சேதப்படுத்துவோமானால் நாமும் பாதிக்கப்பட்டு நம் அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும்.
ஆறுகளில் மணல் அகழ்வு என்பது அந்த நீரோட்டத்தால் வரும் மணல்கள் ஒரு இடத்தில் தேங்கி காணப்படும் அப்படி தேக்கமுற்ற மணல்கள்  நீரின் ஓட்டத்தை தடைசெய்து நதிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்  அதனால் அப்படி தேங்கி நிற்கும் மணல்களை மட்டும் அகழ்வு செய்வதன் மூலம் நதிகளை அழகுடன் பாதுகாக்கவும் முடியும் மக்கள் பயன்பாட்டினை பூர்த்தி செய்து கொள்ளவும் முடியும்.
ஆனால் ஒரு சில இடங்களில் ஆற்று நீர் கிராமங்களுக்குள் வரும் அளவிற்கு மிக மோசமான மணல் அகழ்வை மேற்கொண்டும் மரங்களை வேரோடு சாய்த்தும் ஆற்றுப்பகுதி சேதப்படுத்தப்பட்டடிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மணல் அகழ்விற்கான அனுமதியினை உண்மையில் நீர்பாசன பொறியியலாளர்தான் வழங்க வேண்டும் இந்த செயற்பாடானது வர்த்தமானியில் இருந்தாலும் மன்னாரில் அது செயற்பாட்டுக்கு வரவில்லை மாறாக பிரதேச செயலாளர் சிபாரிசு செய்தால் அனுராதபுரத்தில் இருக்கின்ற  கணியவளத்திணைக்களம் அனுமதி கொடுக்கும் நதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு செய்வதை நீர்பாசன பொறியியலாளர்கள் தான் செய்வார்கள் பிரதேச செயலாளரோ அல்லது பிரதேச சபை தவிசாளரோ அனுராதபுரத்தில் உள்ள கணியவளத்திணைக்களமோ செய்வதில்லை.
மணல் அகழ்வுகளுக்கு அனுமதியினை நீர்ப்பாச திணைக்களங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விடயத்தில் நீர்பாசன திணைக்களம் மிக அவதானத்துடன் செயற்படவேண்டும். எதிர்காலத்தில் மக்கள் அழிவை நோக்கி செல்கின்ற செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று சாள்ஸ் எம்பி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
நிகழ்வின் போது ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் நிகழ்வை சாள்ஸ் எம்பி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு பதிலாக அவரது செயலாளர் றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் குமாரதேவன், பிரதேச நீர்பாசன பொறியியலாளர்கள், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆ.சந்தியோகு, விவசாய அமைப்புகள், நீர்பாசன ஊழியர்கள், மாவட்ட விவசாயிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.
SHARE