மன்னாரில் கசிப்பு வடித்த ஒருவர் பொருட்களுடன் கைது! தண்டப்பணம் செலுத்த உத்தரவு

229

மன்னார் காட்டுப் பகுதியில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் திணைக்கள பணியாளர்கள் மற்றும் வவுனியா மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி செனவிரத்தின ஆகியோர் இணைந்து நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே மன்னார் காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் இருந்து கசிப்பு வடிப்பதற்கு பயண்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் வடித்த கசிப்பு என்பன மீட்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 75 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4

 

SHARE