சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று காலை முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.