04.07.2018 நேற்று மன்னாரில் மழலைகளின் கோட்டமட்ட விளையாட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முன்பள்ளி இணைப்பாளர் அனுல் அவர்களின் தலைமையில் பிரதம விருந்தினராக வருகைதந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி;.சிவமோகன் அவர்கள் கலந்து சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் சாலியன் மற்றும் வைத்தியர் ஜெயபாலினி ஆகியோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மழலைகளின் வாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டு மும்மத வழிபாட்டுடன் இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.






தொடர்ந்து மும்மத வழிபாட்டுடன் கொடியேற்றப்பட்டு வரவேற்புரையுடன் தொடங்கியது. முதல் நிகழ்வாக மழலைகளின் கண்கவர் உடற்பயிற்சியுடன் ஆரம்பமாகி மழலைகளின் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி எம்.பி சி.சிவமோகன் அவர்கள் தெரிவிக்கையில் மழைகள் இவ்வாறு ஒன்றாக கூடி விளையாடும் போது அவர்களின் மனது மகிழ்வில் பூரிப்படைகிறது. இவ்றான நிகழ்வுகள் கட்டாயமாக அனைத்து பிரதேசங்களிலும் நடைபெற வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. இங்கு மழலைகள் அனைவருக்கும் கௌரவ சி.சிவமோகனின் அவர்களின் ஏற்பாட்டில் வன்னிகுறோஸ் அமைப்பின் ஊடாக அனைவருக்கும் பரிசில்கள் வழங்ப்பட்டு மகிழ்விக்கப்பட்டனர்.