சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை மன்னாரில் போரினால் பாதீக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட போரினால் பாதீக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.30 மணியளவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.
இதன் போது காணாமல் போன,கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள்,போரினால் பாதீக்கப்பட்டவர்கள்,காணாமல் போனவர்களது பிள்ளைகள், சிறுர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே,சர்வதேச மனித உரிமைகளை பாதுகாப்போம்,பெண்ணியத்தை கன்னியமாய் காப்போம்,சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவோம்,அப்பா எங்கே? என்று கேட்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் கூறுவது,பெண்கள் மீதான வண்முறையை நிறுத்து என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
-குறித்த பேரணி பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமது பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்கு முன் நின்றனர்.
இதன் போது அரசியல் பிரமுகர்கள்,அருட்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மனித உரிமைகள் தினமான’ இன்று வியாழக்கிழமை மன்னாரில் பேரணியும்,மகஜர் கையளிப்பும் இடம் பெற்றது.
‘மது பாவனையற்ற மனித சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் கருப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று வியாழக்கிழமை (10) மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மன்னார் பஸார் பகுதியில் விழிர்ப்புணர்வு பேரணியும் அதனைத்தொடர்ந்து மகஜர் கையளிப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்