மன்னாரில் மரக்காலை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது!

168

cash-dacoityc_0

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பிற் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்துள்ளார்.

குறித்த மரக்காலையின் உரிமையாளர் நேற்று (8) வர்த்தக நிலையத்தில் பணம் திருடப்பட்டமை குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றினுள் கடந்த புதன் கிழமை(7) இரவு உற்சென்ற குறித்த நபர் குறித்த மரக்காலையினுள் வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-23

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் தற்காலிக தலைமையக பொறுப்பதிகாரி பிரசன்ன பரனமன்னின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொண்ட விசாரணைகளின் ஊடாக நேற்று (8) இரவு வவுனியா வைரவர் புளியங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபரிடம் இருந்து மிஞ்சிய 4 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-24

இதேவேளை, விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE