முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இன்று திங்கள்கிழமை (18)மன்னார் உப்புக்குளம் சித்தி வினாயகர் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
ஆறு ஆண்டுகள் கடந்த தமிழ் இன அழிப்பின் நிணைவு தினம் உலகேங்கும் தமிழர்களால் இன்று நினைவு கூறப்படும் நிலையில் மன்னாரிலும் பல தடைகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் நடைபெற்றது. 10;:00 மணியளவில் மன்னார் உப்புக்குளம் சித்தி வினாயகர் பிள்ளையார் கோவிலில் தமிழரசு கட்சியின்; இஞைஞர் அணி; செயலாளர் சிவகரன் தலைமையில்; இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் அந்தோனி பிறிமுஸ் சிராய்வா, மன்னார் நகர நபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானபிரகாசம்,அதன் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், விவசாய அமைப்பின் தலைவர் எஸ்.சவுந்திர நாயகம், மன்னார் பிரஞைகள் குழுவின் செயலாளர் அந்தோனி மார்க், சமூக ஆர்வலர் மரியநாயகம் மாஸ்டர்,இந்து. கிறிஸ்தவ மதகுருக்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வு பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டதுடன் தீபங்கள் ஏற்றி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் மத வழிபாடுகளிலும் ஈடுபடடு இறந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இன்று திங்கள்கிழமை குறித்த நிகழ்வு மன்னார் நகரசபையில் காலை 10 மணிக்கு நடைபெற ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை துரதிஸ்டவசமாக குறித்த நிகழ்வை மன்னார் நகரமண்டபத்தில் நடத்த மன்னார் மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந் நிலையிலே அவ் நிணைவேந்தல் நிகழ்வு தடைப்பட்டதின் காரணத்தால் அதனை மன்னார் சித்திவினாயகர் பிள்ளையார் கோவிலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உணர்வு பூர்வமாக தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நடைபெற்றது