தலைமன்னார் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து நடைபெற்று நீண்டநேரத்துக்கு பின்பே அவ்வழியாகச் சென்ற ஒருவர் இவர்களைக் கண்டு அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்தார்.
இச்சம்பவத்தில் பிரான்ஸிஸ் பிரான்சிஸ்கா றோசலீன் குரூஸ் (வயது 83) என்ற மூதாட்டி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டோவை ஓட்டிச்சென்ற சாரதியும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.
தெய்வாதீனமாக அவர்களது 7 வயதுப் பிள்ளை காயமின்றித் தப்பிக்கொண்டது. பிரான்ஸிஸ் ததேயு செல்வம் கூஞ்ஜ் (வயது 34) அவரது மனைவி ததேயு செல்வம் அந்தோனிக்கம் வின்சன்டா வினோதினி (வயது 33) ஆகியோர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் வினோதினி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.