மன்னார் – தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு இன்று(14) தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த திட்டம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நிகழ்வு வைத்தியர் அன்ரன் சிசில் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேலும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.