மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசியக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா

144
-மன்னார் நகர் நிருபர்-
 
மன்னார்  சித்திவிநாயகர் இந்து தேசியக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை(17) மாலை பாடசாலை நாவலர் மண்டபத்தில்  கல்லூரி முதல்வர் ரி.தனேஸ்வரன்   தலைமையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி.ஏ.மோகன்ராஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக  ஆங்கில வள நிலைய முகாமையாளர் சண்முகலிங்கம் , மன்னார் நகரசபை தலைவர் ஞானப்பிரகாசம் .அன்ரனி  டேவிட்சன்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் , வலய கல்வி திணைக்கள அதிகாரிகள்  பழைய மாணவர்கள்  ஆசிரியர்கள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2016ஆம் 2017ஆம் ஆகிய இரு வருடங்களில் மாணவ மாணவிகளால் வெளிப்படுத்தப்பட் திறமை சாதனைகள் மற்றும் கடந்த இரண்டு வருடங்களில் புலைமைப் பரிசில் பரீட்சை மற்றும் பல்கலைக் கழகம் தெரிவானவர்கள் என அனைவரையும் பாராட்டும் முகமாக சான்றிதழ்களும் பதக்கமும் நினைவுச்சினனங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பிரதி அதிபர் உப அதிபர் அவர்களால் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
SHARE