மன்னார் தீவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்!

227

மன்னார் தீவுப்பகுதியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதால் மக்கள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தாராபுரம் பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை காணப்படுகின்றது. குறித்த புகையிரத கடவையில் புகையிரதம் வரும் போது எழுப்பப்படும் சமிஞ்ஞை மாத்திரம் ஒலி எழுப்புவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில நேரங்களில் புகையிரதம் வராத சந்தர்ப்பங்களிலும் நீண்ட நேரம் சமிஞ்ஞை ஒலி எழுப்பப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நீண்ட நேரம் மக்கள் குறித்த வீதியை கடக்காமல் நிற்பதாகவும், சமிஞ்ஞை ஒலி நிறுத்தப்பட்ட பின்னர் காத்து நிற்கின்ற மக்கள் செல்லுகின்றனர்.

எனவே தாராபுரம் பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் புகையிரத கடவைக்கு பாதுகாப்பான புகையிரத தடை வேலியை அமைத்து ஊழியர்களை கடமைக்கு அமர்த்தி ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவையில் பல்வேறு இடர்கள் காணப்படுவதாக அப்பகுதியால் பயணிப்பவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகையிரத கடவையிலும் சமிஞ்ஞை ஒலி மாத்திரமே எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பான புகையிரத வேலி அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியால் செல்கின்ற மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சில நேரங்களில் நீண்ட நேரமாக காத்து நிற்கும் மக்கள் புகையிரதம் வராததன் காரணத்தினால் சமிஞ்ஞை ஒலி நிறுத்தப்படுவதற்கு முன் குறித்த வீதியை தாண்டி செல்கின்றனர். இதனால் திடீர் விபத்துக்களும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளனர்.

குறித்த இரு புகையிரத கடவைக்கும் பாதுகாப்பான புகையிரத வேலிகளை அமைத்து பணியாளர்களை கடமைக்கு அமைத்து ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதிகளினுடாக பயணிக்கும் மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE