மன்னார் தோட்டவெளி பகுதியில் காதலித்தவன் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து நிலையில் தர்ஷினி வயது 26 எனும் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யுவதி துாக்கில் தொங்கி உயிரிழந்துள்ளாள்..
தாயார் தோட்ட வேலைக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டு முன்பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் தர்ஷினி உயிரிழந்துள்ளதை அவதானித்து அதிர்ச்சியடைந்ததாகத் தெரியவருகின்றது.
காதலித்து ஏமாற்றியதாக கூறப்படும் நபர் 5ம் கட்டையைச்சேர்ந்தவர் மன்னார் CTBல் மெக்கானிக் வேலை செய்துவருவதாகவும் இவரின் பேரில் ஏற்கனவே முன்பு தன்னை காதலித்து ஏமாற்றி விட்டான் என பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரனை நிலுவையில் உள்ள நிலையிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதித்ததோடு மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் தற்போது அதிகரித்துள்ள இவ்வாறு காதல் என்ற போர்வையில் பல இளம் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என சமூக அக்கறையுடையவர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.