மன்னார் நீதிமன்ற அமர்வு இன்று வெள்ளிகிழமை இடம்பெற்றபோதும் யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகளின் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணைகள் அனைத்தும் வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. யாழ்.புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்போது யாழ்.நீதிமன்ற கட்டடம் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டு சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. இந்த நிலையில் நீதிமன்றம் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வட மாகாணம் தழுவிய பணி பகிஷ்கரிப்பில் சட்டததரணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்