மன்னார் பிரதேச சபையின் புதிய செயலாளராக வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா தயாபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 17 வருடங்கள் அரச சேவை அனுபவத்தை கொண்டிருப்பதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றில் பணியாற்றியுள்ளதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல மாவட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் I I , I என படிப்படியாக பதவி உயர்வு பெற்ற இவர், அண்மையில் நடைபெற்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதன் காரணமாக வடமாகாண சபையால் மன்னார் பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.