மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்…

270

 

மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்…
82d2b084-49b4-49cd-84c8-6d149cf7cc72 401ce573-713a-4f13-8722-132028f6be69 472e55c2-1c21-41b7-a00e-f9f3c67989de 994ddcbc-597d-4a0b-9e90-6875b0ee91e9
மன்னார் பிரதேச செயலக பகுதியின் சாந்திபுரம், இருதயபுரம், ஜீவபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமது உதவித்திட்டத்தோடு, மன்னார் வாழ்வுதய பணிப்பாளர் அவர்களோடு கலந்துரையாடி, வாழ்வுதயம் ஊடாக  கரிட்டாஸ் இலங்கையின் உதவியை பெற்று மக்களுக்கு நிவாரனப்பொருட்க்களை வழங்கும் நிகழ்வு 23-11-2015 திங்கள் பிற்ப்பகல் இடம்பெற்றது.
நிகழ்வின்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட் தந்தை விக்டர் சோசை அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளரும் தற்க்காலிக வாழ்வுதய இயக்குனருமான அருட் தந்தை முரளிதரன் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் மன்னார் பிரதேச செயலக கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகத்தர் திரு.ராதா பெர்னாண்டோ அவர்களும் இணைந்து சுமார் 850 குடும்பங்களுக்கு நிவாரனப்பாவ்ருட்க்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.​
SHARE