மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

426

மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசாலை கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் வலையில் குறித்த காற்றாடி சிக்குண்டுள்ளது. மீனவர்கள் குறித்த காற்றாடியினை படகில் குருநகருக்கு கொண்டு வந்து இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த காற்றாடியினை கொண்டுவந்த மீனவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் எடுத்துள்ளதுடன், காற்றாடி தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
– தகவல் & செய்தி : நிருஜன் செல்வநாயகம்

SHARE