மன்னார் பொது மீன் சந்தையில் மின்சார உபகரணங்கள் திருட்டு

136
(மன்னார் நகர் நிருபர்) 
மன்னார் மாவட்டத்தில் நகர சபையின் கீழ் காணப்படும் பொது மீன் சந்தையானது கடந்த மாதம் நகர சபையின் நிதி உதவியுடன் புணரமைக்கபட்டது. குடிநீர் வசதி, மின்சார வசதி என்பன புரணமைக்கபட்டது. கடந்த வாரங்களில் மீன் சந்தையில் புதிதாக புரணமைக்கப்பட்ட மின்சார உபகரணங்கள் இனம் தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.
மன்னார் மத்திய பகுதியில் காணப்படும் குறிப்பிட்ட மீன் சந்தையானது பல வருடங்களாக மின்சாரம் நீர் வசதி இன்றி காணப்பட்டமையை தொடர்ந்து கடந்த மாதங்களில் நகர சபையினால் தற்காலிக புணர் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரங்களில் இனம் தெரியாத நபர்களினால் பல ஆயிரம் பெறுமதியான மின் உபகரணங்கள் மின் ஆழிகள், மின் சுற்றுக்கள் என்பன களவாடப்பட்டுள்ளது.
குறித்த மீன் சந்தையில் இரவு நேரங்களில் பாதுகாப்பு அற்ற நிலையிலே காணப்படுவதனால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த மீன் சந்தையில் பின் பகுதி கதவு ஒழுங்கான நிலையில் இல்லை எனவும் இரவு நேரங்களில் விலங்குகளின் தங்குமிடமாகவும் குறித்த மீன் சந்தை காணப்படுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாகவும் மீன் சந்தை தொடர்பாகவும் உரிய கவனம் செலுத்துமாறும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE