மன்னார் – மதவாச்சி வீதியில் வாகன விபத்து – சிறைக்கைதிகள் மூவர் படுகாயம்.

259

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து 8 சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் 3 சந்தேக நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது காயமடைந்த 3 கைதிகள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய 5 பேர் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனாந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு, விபத்து குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

SHARE