மன்னார் மாவட்டத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையின் மண் வாசனை நிதியினூடாக ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு குறித்த உணவுப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.