மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக இடம் பெற்ற நோன்பு தொழுகை

177
(மன்னார் நகர் நிருபர்)
நேற்று மாலை பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளியினால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுதும் இன்று 16 பொருநாள் தொழுகைகள் மற்றும் நோன்பு  கொண்டாட்டங்களும் இடம் பொற்றுவருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் நோன்பு தொழுகையும் பிரார்தனையும் இன்று காலை 10.15 மணிக்கு மன்னார் மூர் விதியில் உள்ள பள்ளிவாசலில் இடம் பெற்றது.
அனோகமான இஸ்லாம் மக்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். இன்று அதிகாலையிலே பெண்கள் சிறு பிள்ளைகள் அனைவரும் நோன்பு தொழுகையில் பங்குபற்றி சென்றமை காணக்கூடியதாக இருந்தது. தொழுகையின் பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்திகளை பரிமாரிக் கொண்டதுடன் நோன்பு கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
  
  
SHARE